என் வலைப் பதிவுக்கு வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்

என் வலைப் பதிவுக்கு வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.

புதன், 9 நவம்பர், 2011

விஜய், அஜித், சூர்யாவுக்கு எச்சரிக்கை... :ஸ்டீவென் ஸ்பீல்பெர்க் வைக்கபோறார் ஆப்பு !!!...

உங்களில் யார் அடுத்து சூப்பர் ஸ்டார் என்ற தமிழ் திரையுலக ஹீரோக்களுக்கான தீராத கனவுக்கு நடிகர்கள் விஜய், சிம்பு, தனுஷ் உள்ளிட்டோர் போட்டி போட்டுக்கொள்ளும் இந்த தருணத்தில் இவர்கள் அனைவருக்கும் ஒட்டுமொத்த போட்டியாக ஒரு புது ஹீரோ வரவிருக்கிறார். ஹாலிவுட், கோலிவுட், மற்றும் போலிவுட் ஹீரோக்களை கிறங்க அடிக்க போகும் இந்த ஹீரோவுக்கு என்றுமே வயது 17 .


இந்த ஹீரோ தமிழ் பட ஹீரோயின்களை போல அல்லாமல் எல்லா மொழிகளையும் நன்கு அறிந்தவர், எல்லாம் வல்லவர், யோகா, சண்டை, நடனம் என்று பலதுறைகளிலும் வித்தகர், சிக்ஸ் பேக் காட்டாத தன்மான சிங்கம் .

சிறுவயதில் என் கனவுகண்ணன். இப்போதும் இளையோர்களை சுண்டி இழுக்கும் மன்னன்,

மார்கழி மாதம் விடுமுறைக்கு பஞ்சமில்லை. அந்த விடுமுறையை ஆவலுடன் எதிர் பார்க்கும் சிறுசு மற்றும் பெருசுகளுக்கு ஒரு இனிப்பான செய்தி.





வருகிறான் "டின் டின்"...


யார் இந்த "டின் டின்"?

பெல்ஜியம் நாட்டை சேர்ந்த "ஹெர்ஜ் " என்று அழைக்கப்படும்  கோஜெர்ஸ்   ரெமி (1907  - 1983) என்ற ஓவியரின் கற்பனையில் உருவான கதாபாத்திரம் இந்த டின் டின் .இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பெல்ஜியம் நாட்டின் நிருபராக துப்பறியும் புலியாக இவரை சித்தரித்து பல கதைகள் வெளியாகியுள்ளன.











1929  ஆம் ஆண்டுகளில் டின் டின் ஒரு ரியல் ஹீரோவாக சித்தரிக்கப்பட்டுள்ளான். பல மொழிகள் அறிந்த இந்த துப்பறியும் சிங்கம் பல நாடுகளுக்கும் சென்று எதிரிகளை துவைத்து தூளாக்கும் வல்லமை உண்டு.
டின் டின் பத்து  விஜய்,  ஐந்து விஜயகாந்த், இரண்டு சூர்யா என்று தற்போதுள்ள அணைத்து ஹீரோக்களுக்கும் முன்னோடி.











இவருடன் துணை பாத்திரங்களான இவரின் செல்ல நாய் குட்டி "ஸ்னோவீ ", எப்போதும் கடுப்பில் இருக்கும் மாலுமி கப்டன் ஹடோக் , டின் டின் இன் பக்க துணையாக அட்வைஸ் ஆறுமுகமாக  விளங்கும் பேராசிரியர் கால்குலஸ் , மற்றும் டபள் காமெடி பீஸ் தோம்ப்சன் மற்றும் தோம்ப்சன் இரட்டையர்க. என்று இவர்களை சூழ்ந்துகொண்டு சுவாரஷ்யமாக செல்லும் கதைகள் வாசிக்கும் போது நாமும் அவர்களுடன் பயனிப்பதான சுவாரஷ்யம் இருக்கும்.

எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கின்றது, எனது பள்ளிகாலத்தில் இந்த டின் டின் கேலிசித்திரம் பார்க்க நானும் என் சகோதரர்களும் காட்டும் ஆர்வம், அந்த கதா பத்திரம் டின் டின் போல தலை வாரிகொள்ளும் என் தம்பி, நான் வளர்த்த பொமனேரியன் நாய்குட்டிக்கு ஸ்னோவி என்று சூட்டிய பெயர், அடிக்கடி கடுப்பாகும் எங்கள் மாமாவுக்கு நாங்கள் சூட்டிய பெயர் கப்டன் ஹடோக், டின் டின் கதைபுத்தகங்களின் அணைத்து அத்தியாயங்களையும் நானும் என் நண்பியும் போட்டி போட்டு வாசித்து மற்றயவர்களுக்கு கதைசொல்வது போன்ற இன்னும் இனிக்கும் தருணங்கள் நினைவில் நிழலாடுகின்றது.


எல்லா ஹீரோக்களுக்கும் இருப்பதை போல இவருக்கு உள்ள கெட்ட பழக்கம் ரொம்ப யோசிப்பார்.ஆழ்ந்த சிந்தனை. அந்த நேரத்தில் இவர் உலகத்தை மறந்து கற்பனை உலகத்தில் சஞ்சரிப்பதால் இவர் பல சிக்கல்களில் மாட்டி கொள்வதும், அதிலிருந்து விடுபட இவர்களின் துணை கதாபாதிரங்களுடன் அடிக்கும் லூட்டியும் கதை நகர்த்தலுக்கு சுவாரஷ்யத்தை வலுப்பெற செய்கின்றது.









டின் டின் இன் வீர சாகசங்களை சிறியோர் முதல் பெரியோர் வரை ரசிக்கும் வடிவில் புத்தகமாக வெளியிட்டு அதிலும் சாதனை படைத்துள்ளனர்.பிரெஞ்சு , ஜெர்மன்,ஆங்கிலம் உட்பட என்பதுக்கும் மேலான மொழிகளிலும் , 350 மில்லியன் பிரதிகளுக்கு மேல் வெளிவந்து இருபதாம் நூற்றாண்டின் சாதனை நாவலாக புகழ் ஈட்டிக் கொண்டது. 

இதில் ஆங்கில மொழி சிறுகதை புத்தகங்கள் சிலவற்றை என் பள்ளிகாலத்தில் வாசித்து இருக்கின்றேன்... அப்போது என் பொழுது போக்கே டின் டின் நாவல்களே....

இரண்டாம் உலக யுத்த காலத்திற்கு முன்னர் பிரெஞ்சு புரட்சி விதையிட தொடங்கிய காலத்தில் உருவான எழுத்து, முற்போக்கு சிந்தனை போன்றவற்றிற்கு டின் டின் சிறுகதைகளும் எடுத்துகாட்டாகும். 10 ஜனவரி 1929  ஆம் ஆண்டு பிரெஞ்சுமொழியில் "  Le Petit Vingtième " என்ற பெயரில் பெல்ஜியம் நாட்டில் வெளிவந்த சிறுவர் கத்தோலிக்க பத்திரிகையான "Le XXe Siècle" இல் முதன் முதலில் இந்த சிறுகதை வெளியானது. புரட்சிகள் துளிர்விடும் காலத்தில் இவ்வகையான வீர சாகசம் புரியும் ஹீரோவுக்கு மவுசும் கொஞ்சம் ஜாஸ்தியாகத்தான் இருந்தது. இருபத்து நான்கு அத்தியாயங்களை கொண்டதான இந்த கதைகலத்தின் முதல் பதிப்பு காலப்போக்கில் தொலைகாட்சி, மற்றும் வானொலி ஊடாக உலகமெங்கும் பிரபலம் அடைய தொடங்கியது.

என்றும் இளமையுடன் இருக்கும் இந்த டின் டின் இன் வயது 17 . சிறுவயதில் என் மனம் கவர்ந்த கேலிசித்திரம் "டின் டின்" . நான் அவப்போது யோசிப்பேன் கேலி சித்திரங்களை திரைப்படமாகும் முயற்சியில் இந்த படம் இன்னும் உள்வாங்கபடவில்லையே என்று. அந்த குறையை நிவர்த்தி செய்த என் மனம் கவர் இயக்குனர் ஸ்டீவென் ஸ்பீல்பெர்க் அவர்களுக்கு நன்றி...








இந்த கதையை திரைப்படமாகும் முதல் முயற்சி 1981  ஆம் ஆண்டுகளிலேயே இயக்குனர் ஸ்டீவென் ஸ்பீல்பெர்க் தொடங்கி இருக்கிறார். டின் டின் இன் பிதாமகன் "ஹெர்ஜ்" கும் இவருக்கும் இடையில் அப்போதே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி படத்தின் ஆரம்ப வேலைகள் தொடங்க பட்டு விட்டனவாம்.

ஆனால் 1983  ஆம் ஆண்டு "ஹெர்ஜ்" இன் மறைவால் கிடப்பில் போடப்பட்ட டின் டின் இன் திரைப்பட உருவாக்கம் தற்போது மீண்டும் புத்துருவாக்கம் பெற்று அதே ஸ்டீவென் ஸ்பீல்பெர்க் அனுசரணையுடன் எதிர்வரும் டிசெம்பர் மாதம் வெளிவர இருக்கின்றது.

தமிழ் பட ஹீரோக்களை கலங்கடிக்க வரபோறான் டின் டின்...........



பி கேர் புல்..


ஆங்கிலம்,பிறமொழி சினிமா, புத்தகம்,கேலிசித்திரம் 

பகிர

உள்ளே சேர்வதற்கு...

Related Posts Plugin for WordPress, Blogger...